சேலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

சேலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
X

வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

சேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடம், டிக்கெட் கவுண்டர், பார்சல் இடம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது. ரயில் நிலையம், பஸ் நிலையம், வழிப்பாட்டு தலங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சேலம் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில் நிலைய வளாகம் முழுவதிலும் இந்த சோதனை நடைபெற்றது. பயணிகள் அமரும் இடம், டிக்கெட் கவுண்டர், பார்சல் இடம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் சேலம் வழியாக சென்ற ரயில்களிலும் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!