சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம்

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம்
X

வாலிபர் உடல் கண்டெடுக்கப்பட்ட இடிந்த வீடு

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை.

சேலம் குகை ராமலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மளிகை வியாபாரி ஆறுமுகம். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான சுமார் 250 சதுர அடி இடத்தில் சிதிலமடைந்து இருந்த பழைய சுவரை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

நேற்றைய தினம் பழைய சுவர்களில் ஒருபகுதியை இடித்துள்ளனர். மீதி பகுதியை இன்றுகாலை இடிக்க முயன்றபோது அந்த சுவர் ஏற்கனவே விழுந்து காணப்பட்டது. மேலும் அந்த சுவருக்கு அடியில் வாலிபர் சடலம் ஒன்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் கொடுக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இடிபாடுகளுக்கிடையே இருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்(20) என்பது தெரியவந்தது.

இதனை அறிந்த ராஜேஷ்குமார் உறவினர்கள் அப்பகுதியில் கூடி கதறி அழுதனர். ராஜேஷ்குமார் எதற்காக அந்த இடத்திற்கு வந்தார்?. அடித்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!