பெட்ரோல், டீசல் வரியை குறைக்காத திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் வரியை குறைக்காத திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
X

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காத திமுக அரசை கண்டித்து சேலத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காத திமுக அரசை கண்டித்து சேலத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்து விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பம்பாய் சிவக்குமார் மற்றும் மாவட்ட மகளிரணி தலைவி சுமதிஸ்ரீ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியை குறைக்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!