சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்

சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்

இனிப்பு கொடுத்து கொண்டாடிய பாஜகவினர்.

நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றதையடுத்து சேலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது. உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து கொண்டாடினர். பாஜகவின் வெற்றியை பகிர்ந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story