சேலம் தொழில்நிறுவனங்களில் காலை முதலே ஆயுதபூஜை கொண்டாட்டம்

உழைப்பின் சிறப்பையும் தொழிலில் மேன்மையும் கொண்டாடும் ஆயுத பூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மரவனேரி பிரதான சாலைகளில் உள்ள வாகன பழுது பார்ப்பு கூடம், விற்பனையகம், இரும்பு பட்டறைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் காலை முதலே ஆயுத பூஜை கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தாங்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை தூய்மை செய்து அவற்றிற்கு சந்தனம், குங்குமம், பூக்கள் மற்றும் வாழை மரங்கள் வைத்து அலங்கரித்து மா இலை தோரணம் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் ஒவ்வொரு இயந்திரங்கள் முன்பும் தனித்தனியாக வாழை இலையை வைத்து பூ, பழம், தேங்காய், உள்ளிட்டவற்றை படையலாக படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொரிகடலை களை வழங்கி சிறப்பாக ஆயுத பூஜையை கொண்டாடினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu