முன்னாள் அமைச்சர் தங்கமணி மகன் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி மகன் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
X

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய வீடு.

சேலத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணியின் மகன் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்தை விட 4.85 கோடி கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கமணியின் பூர்வீக வீடு உள்பட 69 இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீடு மற்றும் ரெட்டிப்பட்டியில் உள்ள தங்கமணியின் நண்பர் குழந்தைவேலுவின் பிரபல ஹோட்டல், குரங்குசாவடி பகுதியில் உள்ள அவரின் வீடு உள்பட 4 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இதில் 20 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!