தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட நினைக்கிறார் அண்ணாமலை: ஈஸ்வரன் பேட்டி

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட நினைக்கிறார் அண்ணாமலை: ஈஸ்வரன் பேட்டி
X

தீரன் தொழிற்சங்க பேரவையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு எதிர்க்கட்சியாக செயல்பட அண்ணாமலை எண்ணுகின்றார் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில், தீரன் தொழிற்சங்க பேரவையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த்த அவர்,அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் எவ்வித அரசியல் காழ்புணர்ச்சியே பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என்று கூறினார்.

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் அதிமுக அழித்துவிட்டு எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட அண்ணாமலை எண்ணுகின்றார். இது அண்ணாமலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சொல்லாது எனவும், தமிழக மக்களில் தேவைகளை அறித்து மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசின் வழங்கிய கோரிக்கைகளை பெற்று தரவேண்டும் என்றார்.

தமிழகத்தில் முதல்வர் குறித்து அவதூறு பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்தார். கொங்கு மண்டலத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare