அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்: சேலத்தில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்: சேலத்தில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ
X

அன்னதானம் வழங்கி பாமக சட்ட மன்ற உறுப்பினர் இரா.அருள்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி சேலத்தில் 100க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு எம்எல்ஏ., உணவு வழங்கினார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்த நாள் விழாவையொட்டி சேலம் மாநகர் மாவட்ட பாமக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவிலில் 100 க்கும் மேற்பட்டோருக்கு சேலம் மேற்கு தொகுதி பாமக சட்ட மன்ற உறுப்பினர் இரா.அருள் அன்னதானம் வழங்கினார்.

மேலும் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்ற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கட்சிக்கொடியிணை ஏற்றி வைத்து சட்டமன்ற உறுப்பினர் உட்பட கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் இராஜரத்தினம் சத்திரியசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!