அமமுக.,வுக்கு பயந்து அதிமுகவில் உட்கட்சி தேர்தல்: அமைப்பு செயலாளர் எஸ்.கே.செல்வம்
சேலம் 4 ரோடு அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மணி மண்டபத்திற்கு கொண்டலாம்பட்டி பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த அமமுகவினர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சேலம் மாவட்டத்தை மறுசீரமைப்பு செய்து புதிய நிர்வாகிகள் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி சேலம் மத்திய மாவட்ட செயலாளராக கழக அமைப்புச் செயலாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வம், சேலம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே மாதேஸ்வரன், சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.சண்முகம் சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.சங்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் இன்று சேலம் 4 ரோடு அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா மணி மண்டபத்திற்கு கொண்டலாம்பட்டி பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு கழகத்தினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வீரபாண்டி எஸ்.கே செல்வம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக மாநில அமைப்பு செயலாளர் எஸ்.கே செல்வம், அதிமுகவில் உட்கட்சி தேர்தல் என்பது அமமுக வுக்கு பயந்தே நடத்தப்படுவதாகவும் அந்த தேர்தலில் ஜனநாயகமில்லை என்றும், அடிமட்ட தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமமுகவில் தற்போது சசிகலா இல்லை என்று தெரிவித்த எஸ்.கே.செல்வம், தற்போதைய சூழ்நிலையில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான் என்றும் தெரிவித்தார். சசிகலாவை ஓபிஎஸ் ஏற்றுகொள்ளும்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் ஏற்காததற்க்கு காரணம் அவர் செய்த துரோகம் அவர் மனதை நெருடுவதாகவும், அதனால் அவர் சசிகலா வருகையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu