சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை மனு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை மனு
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர்.

சேலம் பெரியார் பல்கலை.,ல் துறைத் தலைவர் பதவி சுழற்சி முறையில் கொண்டு வர அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக விதியின் படி, ஏதாவது ஒரு துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பேராசிரியராகப் பணியாற்றினால் அவர்களை சுழற்சி முறையில் துறை தலைவராக மற்றும் துறை துணைத் தலைவர் துணைவேந்தர் நியமனம் செய்ய வேண்டும்.

ஆனால் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடக்கம் முதலே முதலே இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை எனக்கூறி அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் அண்ணாதுரை கூறுகையில், பல்கலைக்கழக விதியின்படி துறைத் தலைவர் மற்றும் துறை துணை தலைவர் பதவிகளை சுழற்சி முறையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் இனவாரி சுழற்சிமுறை ஆணையின்படி பேராசிரியர் பதவியை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!