சேலத்தில் அதிமுக எம்பி., தம்பிதுரை மகள் திருமண விழா: ஓபிஎஸ், இபிஎஸ் பங்கேற்பு

Namratha Thambidurai
Namratha Thambidurai-மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரையின் மகள் நம்ரதாவின் திருமணம் சேலத்தில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையேற்று மணமக்கள் நம்ரதா - கௌதம் ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினர்.
இந்த திருமண விழாவில் அதிமுக அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், செம்மலை, அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கேபி அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், திண்டுகல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu