வேளாண் திருத்த சட்டம் வாபஸ்: சேலத்தில் அமைச்சர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வேளாண் திருத்த சட்டம் வாபஸ்: சேலத்தில் அமைச்சர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

சேலத்தில் இனிப்பு வழங்கிய கொண்டாடிய அமைச்சர்கள் நேரு மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர்.

வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்ததையடுத்து சேலத்தில் அமைச்சர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி 3 வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்ப பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதேபோல் சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு