பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு: 18 வகை பொருட்கள் மட்டுமே வழங்கல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு: 18 வகை பொருட்கள் மட்டுமே வழங்கல்
X

சேலத்தில் பொங்கல் பரிசுத்தொகைப்பை வாங்கிச்செல்லும் மக்கள்.

சேலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 18 வகையான பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை மஞ்சள் பையில் வைத்து, முழு கரும்பு ஒன்றும் சேர்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பாக அனைத்து ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருதது.

இதனைத்தொடரந்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நேற்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாநகரில் உள்ள பெரும்பாலான நியாயவிலை கடைகளில் பரிசு தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மஞ்சள் பையுடன் 21 வகையான பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், சேலத்தில் பெரும்பாலான கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் மஞ்சள் பை வழங்கப்படவில்லை.

மேலும் ஒரு சில கடைகளில் 18 வகையான பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டால் 18 வகையான பொருட்கள் மட்டுமே வழங்கபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொங்கல் பரிசு விநியோகத்தில் நடைபெற்று வரும் முறைகேடு குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் முழுமையான பரிசு கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil