சேலத்தில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி மையங்களில் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 8-வது கொரோனா தடுப்பூசி மெகா முகாம்பி இன்று (14.11.2021) காலை 7.00 மணி முதல் 205 மையங்களில் நடைபெற்று வருகிறது. அஸ்தம்பட்டி மண்டலம், சகாதேவபுரம் ரோட்டர் கிளப்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதா, தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்களின் விபரங்கள் முறையாக பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறதா என்றும், தடுப்பூசி செலுத்த வந்துள்ள பொதுமக்களிடம் முதல் தவணையா அல்லது இரண்டாவது தவணையா என்றும் கேட்டறிந்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்த ஆணையாளர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாராதவர்களை கண்டறிந்து அவர்கள் வீட்டிற்கு சென்று மையத்திற்கு அழைத்து வந்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிய ஏற்பாடுகளை களப்பாணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாநகராட்சிப் பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட 7 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 1,44,618 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியாக 60,927 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 83,597 நபர்களுக்ளும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu