சேலம் மாநகராட்சியில் இன்று 60 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு

சேலம் மாநகராட்சியில் இன்று 60 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு
X

சேலம் மாநகராட்சியில் இன்று நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 60 உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மாநகராட்சி கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

சேலம் மாநகராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 60 உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மாநகராட்சி கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சேலம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 60 மாமன்ற உறுப்பினர்கள் தனித் தனியே பதவியேற்றுக் கொண்டனர்.

மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒவ்வொருவரும் இறைவன் மீது ஆணையாக தான் வெற்றி பெறுவதற்கு காரணமான கட்சி தலைவர்கள் மீது ஆணையாகவும் பதவி ஏற்று கொள்வதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!