/* */

பாரா ஒலிம்பிக்கில் வெற்றிபெற 2 மீட்டர் இலக்கு: மாரியப்பன் தங்கவேல்

அடுத்து நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் 2 மீட்டர் இலக்குடன் வெற்றி பெறுவேன் என்று தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பாரா ஒலிம்பிக்கில் வெற்றிபெற 2 மீட்டர் இலக்கு: மாரியப்பன் தங்கவேல்
X

மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கிய மாரியப்பன்.

இந்தியாவில் தொலைநோக்குப் பார்வை நனவாக்க இளைஞர்கள் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகமும் இணைந்து நடத்தி வரும் ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் சேலம் தனியார் பள்ளியில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மீட் தி சாம்பியன் என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதனைத்தொடர்ந்து தங்கம் வென்ற மாரியப்பன் பள்ளி மாணவ மாணவிகளிடையே கலந்துரையாடினார். அப்போது மாரியப்பன் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் மாணவ மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்க பயிற்சி எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் விளையாட்டு துறையில் மாணவ மாணவிகள் அதிக அளவில் பங்கேற்பதற்கு கடுமையான முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து கேவிகளுக்கு பதிலளித்த மாணவர்களுக்கு மாரியப்பன் பரிசுகளை வழங்கினார். இதனையடுத்து பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் வாலிபால் விளையாடினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன், ஒலிம்பிக் சாம்பியன்களை மாணவர்கள் மத்தியில் பேச செய்து விளையாட்டில் ஊக்கம் கொடுக்க மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. இதுபோன்று மாணவர்கள் மத்தியில் பேசுவதன் மூலம் அவர்களுக்கு ஊக்கம் கிடைத்து வருங்காலத்தில் சாதிக்க முடியும். கிராமப்புற மாணவர்களும் நன்கு பயிற்சி பெற இயலும் என்ற அவர், தற்போது பாரா ஒலிம்பிக்கில் 19 பதக்கங்கள் இந்தியா பெற்றிருக்கும் நிலையில், வருங்காலத்தில் அது நூறு பதக்கங்களாக அதிகரிக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இப்போதே பயிற்சி தொடங்கிவிட்டேன். முதலில் ஆசிய விளையாட்டு, அடுத்தது உலக சாம்பியன் விளையாட்டு போன்றவை நடைபெற உள்ளது அதில் பங்கேற்பேன். அதை தொடர்ந்து நடைபெறும் பாரா ஒலிம்பிக்கில் இரண்டு மீட்டரை இலக்காகக் கொண்டு அதற்கான பயிற்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.

சேலத்தில் அகாடமி பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சேலத்தில் சிந்த்தடிக் மைதானம் அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்.

Updated On: 24 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்