கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தினருக்கு ரூ.1.32 கோடி இழப்பீடு

கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தினருக்கு ரூ.1.32 கோடி இழப்பீடு
X

லோக் அதாலத் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய காட்சி.

சேலத்தில் கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு லோக் அதாலத் மூலம் 1.32 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் லோக் அதாலத் இன்று நடைபெற்றது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், ஓமலூரில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் 5,986 வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கடந்த 25 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 12 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மேட்டூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் சென்றபோது திருச்சி மண்ச்சநல்லூரில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த வழக்கில், இன்று சமரச தீர்வு காணப்பட்டது. இதில் உயிரிழந்த ஆசிரியர் ஒருவருக்கு ரூ. 86.50 லட்சமும், மற்றொரு ஆசிரியருக்கு ரூ. 16 லட்சமும், அதே விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு 30 லட்சமும் என மொத்தம் 1 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்வானது. இதையடுத்து இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!