100 கோடி கொரோனா தடுப்பூசி சாதனை: நூதன முறையில் நன்றி தெரிவித்த மாணவர்கள்

100 கோடி கொரோனா தடுப்பூசி சாதனை: நூதன முறையில் நன்றி தெரிவித்த மாணவர்கள்
X
100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததை சேலம் கல்லூரி மாணவ, மாணவியர் நூதன முறையில் நன்றி தெரிவித்தனர்.

கொரானா நோயிலிருந்து மக்களை காக்க 100 கோடி கொரோனா தடுப்பூசி இலவசமாகச் செலுத்தியதைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பாஜக இளைஞரணி சார்பில், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளை வைத்து 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் அடையாளமாக 100 என்று வரிசையில் மாணவ மாணவிகள் அணிவகுத்து நின்றனர்.

மேலும், கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த முன் களப்பணியாளர்களான மருத்துவர், செவிலியர், துப்புரவுப் பணியாளர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்களையும் பாராட்டும் விதமாக மாணவ மாணவிகள் கைகளைத் தட்டி நன்றியை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்