சேலம் மயான கொள்ளையில் காளி வேடமிட்டவர்கள் ஆட்டை உயிருடன் கடித்து ஆக்ரோஷம்
சேலம் மயான கொள்ளையில் காளி வேடமிட்டவர்கள் ஆடு, கோழிகளை உயிருடன் கடித்து ஆக்ரோஷமாக ஆடினர்.
ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில் மயான கொள்ளை விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சியாகவும், கோலாகலமாகவும், நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் பல நூறு ஆண்டுகாலமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த மயான கொள்ளை நிகழச்சி மிகவும் சிறப்புவாய்ந்தது ஆகும். மயான கொள்ளைக்காக பக்தர்கள் 15 நாட்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹாசிவராத்திரி தினத்தில் அங்காளம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து மஹா சிவராத்திரியின் மறுநாளான இன்று மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு அம்மனுக்கு பல்வேறு விதமான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்து விரதம் இருந்த பக்தர்கள் அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களை போல பக்தர்கள் காளி வேடமணிந்து நடனமாடியபடி, சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திகடன் செலுத்தினர்.
அப்போது பக்தர்கள் உயிருடன் உள்ள கோழி ஆடுகளை வாயில் கடித்துக்கொண்டு ரத்தம் சிந்த சிந்த சென்றபோது சுடுகாட்டின் வளாகத்தில் காத்திருந்த பகதர்கள் வழிகள் தோறும் படுத்து கொண்டு ஆசி பெற்றனர். பக்தர்களை தாண்டி சென்ற அம்மன் வேடமணிந்த பக்தர்கள் சுடுகாட்டில் சூறை ஆடி விரத்தை முடித்தனர். இந்த நிகழ்ச்சியை காண சேலம் மற்றும் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து மயான கொள்ளை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu