Salem Attracts Investments-முதலீடுகளை ஈர்க்கும் சேலம்..!
Salem attracts investments-சேலம் ரயில்வே சந்திப்பு (கோப்பு படம்)
Salem attracts investments,Salem News, Salem News Today, Salem News in Tamil, Salem News Live
தமிழ்நாட்டில் சென்னையைத் தாண்டி பிற பகுதிகள் வளர்வதன் மூலம் ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான வளர்ச்சி வேகம் அடைய முடியும் என்பதை அரசு தீவிரமாக நம்புகிறது. இதற்கு ஏற்றார் போல் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலுமே பட்டதாரிகளும், திறன் வாய்ந்த ஊழியர்களும் அதிகளவில் உள்ளனர்.
Salem Attracts Investments
இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு புதிய முதலீடுகளைச் சென்னையை மட்டுமே குறிவைத்து ஈர்க்காமல் தெற்கில் தூத்துக்குடி, மேற்கில் கிருஷ்ணகிரி வரையென அனைத்து மாவட்டங்களிலும் புதிய முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும் ஈர்த்துள்ளது.
இந்தப் பயணத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கடந்த 5 வருடத்தில் அதிகப்படியான முதலீட்டையும், வர்த்தகத்தையும் ஈர்த்தது கொங்கு மண்டலம் தான். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக சேவைத் துறையில் அதிகப்படியான முதலீட்டையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கியது கோயம்புத்தூர் மாவட்டம்.
Salem Attracts Investments
இந்த நிலையில் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தையும் சேர்த்துப் பிற மாவட்டங்களும் இந்த வாய்ப்பை பெற்றுள்ளன. கொங்கு மண்டலத்தில் கோயம்புத்தூர், திருப்பூருக்கு அடுத்தபடியாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கவனத்தைப் பெறுவது சேலம் மாவட்டம் தான்.
திறன் வாய்ந்த ஊழியர்களுக்குப் பஞ்சமில்லா மாவட்டமாக சேலம் இருப்பது மட்டும் அல்லாமல் சமீபத்தில் விமான சேவையும் துவங்கப்பட்டு உள்ளதால் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதில் ஆச்சர்யப்படத் தேவை இல்லை. சேலத்தில் விமான சேவை துவங்கப்பட்டதில் இருந்தே தொழில் அதிபர்களின் கவனம் சேலத்தை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கார்ப்பரேட் கணக்கியல் துறையில் பிக் 4 எனப் பெருமையுடன் அழைக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றான டெலாய்ட் சேலத்தில் புதிதாக ஒரு அலுவலகத்தைத் திறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தைத் தொடர்ந்து மதுரையிலும் டெலாய்ட் தனது புதிய அலுவலகத்தைத் திறக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Salem Attracts Investments
டெலாய்ட் நிறுவனம் இந்தியாவில் 16 நகரங்களில் அலுவலகங்களை வைத்திருக்கும் நிலையில் சேலம் மற்றும் மதுரையில் திறக்கப்படும் அலுவலகம் மூலம் மொத்த நகரங்கள் பட்டியல் 18 ஆக உயர உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இதுகுறித்து தி சேலம் நியூஸ் என்ற டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் சேலத்தின் அதிரடி பொருளாதார வளர்ச்சிப் பாதையின் துவக்கமாக டெலாய்ட் நிறுவனத்தின் வருகை பார்க்கப்படுகிறது. சேலத்தில் ஏற்கனவே ஐடி பார்க், புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் என அனைத்தும் தயாராக இருக்கும் வேளையில் கடந்த 5 வருடத்தில் சிறிதும், பெரிதுமாக முதலீடுகள் வரத் துவங்கியுள்ளன.
Salem Attracts Investments
இந்த திட்டங்களின் மூலமாக சேலம் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu