தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் ரேஷன் பொருள்?சேலத்தில் பரபரப்பு
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கூறி ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்
சேலம் மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி, பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில், அன்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 19 ஆயிரம் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 1540 நியாய விலை கடைகளின் மூலமாக, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நியாயவிலை கடை ஊழியர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, நியாயவிலை கடைகள் முன்பாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் நியாய விலை கடை ஊழியர்கள் பொருள் வாங்க வரும் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்தி கொண்டீர்களா என்று கேட்டு, செலுத்தி கொள்ளாத நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, திடீரென இவ்வாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது, சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ரேஷனில் பொருட்கள் வாங்குவதற்கு தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்று, சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu