சேலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட உத்தரவு

சேலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட உத்தரவு
X

மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ். 

சேலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 2ம் தேதி இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

வருகிற 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை நடத்துவோர் அன்று தங்கள் கடைகளை மூடி அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் 4 மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், அரசின் உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடைகளில் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி