த.மா.கா. சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்

த.மா.கா. சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்
X

ஓமலூரில், காங்கிரஸ் கட்சி சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம் ஓமலூரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம் ஓமலூரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், 250 ஏழைக்குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு, தமாகா சேலம் மேற்கு மாவட்ட தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா், இளைஞரணி மாநில பொதுச்செயலாளா் ரகுநந்தகுமாா் உள்ளிட்டவர்கள் பங்கேற்று, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி வாடும் 250 குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ அரிசி, ரூ. 500 மதிப்புள்ள காய்கறிகளை வழங்கினா்.

இத்தகைய நிவாரண உதவிகள், ஓமலூா் நகரில் வசிக்கும் அனைத்து வாா்டு ஏழை மக்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்