சேலத்தில் ஓட்டு எண்ணுவதற்கு ஏற்பாடுகள் தீவிரம்

சேலத்தில் ஓட்டு எண்ணுவதற்கு  ஏற்பாடுகள் தீவிரம்
X
சேலம் கருப்பூர் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் 4 தொகுதி வாக்குகளை எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் கருப்பூர் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் 4 தொகுதி வாக்குகளை எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளின் வாக்குகள் சேலம் கருப்பூர் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்தை சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து தபால் ஓட்டு எண்ணும் வாக்கு மையத்தையும், கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து விரிவான தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கூடுதலாக மேட்டூர் சட்டமன்ற தொகுதி வாக்குகளையும் சேலம் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் வைத்து எண்ணுவதற்கான பரிசீலனையும் மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ மாறன், சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார், உதவி கமிஷனர் சந்திரசேகர், ஓமலூர் தாசில்தார் அருள்பிரகாசம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கீதா பிரியா, மாநகராட்சி உதவி ஆணையாளர் சரவணன், சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், சேலம் அரசு என்ஜினியரிங் கல்லூரி நேர்முக உதவியாளர் அறிவழகன் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!