சேலம் அருகே தண்டவாள சீரமைப்பு பணி: மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்

சேலம் அருகே தண்டவாள சீரமைப்பு பணி:    மாற்றுப்பாதையில் ரயில்கள்  இயக்கம்
X

மாதிரி படம் 

சேலம் அருகே தண்டவாளங்கள் சீரமைப்பு பணிகள் நடப்பதால் மூன்று ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர் - மேட்டூர் அணை இரட்டை வழித்தட பாதையில் தண்டவாளம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வழித்தடம் வழியே செல்லும் ரயில்கள் வெவ்வேறு நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி கோவை லோக்மான்யதிலக் எக்ஸ்பிரஸ் வரும் 24ம் தேதி மற்றும் மார்ச் 24 ஆம் தேதியன்று சேலம், தர்மபுரி, ஓசூர் வழி திட்டத்திற்குப் பதிலாக மாற்று வழியாக சேலம், ஜங்ஷன், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

இதேபோல் எர்ணாகுளம் பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் பெங்களூர்- எர்ணாகுளம் தினசரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வரும் மார்ச் 24ஆம் தேதியன்று ஓசூர், தர்மபுரி வழிதடத்திற்கு பதிலாக கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai solutions for small business