காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
X
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும் அதிமுக 7 வார்டுகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற தேர்தலின்போது அதிமுக வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் ஆகிய 8 பேரும் வரவில்லை.

போதிய எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக, பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான மயில்வாகனன் அறிவித்தார். பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், ஆணையம் அறிவிக்கும் மற்றொரு தேதியில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
Will AI Replace Web Developers