3 அடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

3 அடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
X

சேலம் மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நான்கு இடங்களில் வைத்து எண்ணப்படுகின்றன. சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர் மற்றும் மேட்டூர் ஆகிய 4 தொகுதிகளில் உள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசு பொறியியல் கல்லூரி மையத்திலும், சேலம் ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு ஆகிய 3 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அம்மாபேட்டை கணேஷ் கல்லூரி வளாகத்திலும் எடப்பாடி, சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் சங்ககிரி விவேகானந்தா கல்லூரி மையத்திலும், ஆத்தூர் கெங்கவல்லி ஆகிய தொகுதியில் பதிவாகும் வாக்குகள் ஆத்தூர் அருகே உள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும் எண்ணப்பட உள்ளன .

இந்த 4 மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது . இதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக கண்காணிக்க எல்இடி டிவி வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அறைகளில் வைக்கப்பட்ட சீல் வைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும் ஆயுதப்படை போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 4 மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!