சேலம்-சென்னை விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்

சேலம்-சென்னை விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்
X

கோப்பு படம்

முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சேலம்-சென்னை விமானச்சேவை, நாளை முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக, சேலம் விமான நிலைய இயக்குனர் வி.கே.ரவீந்திரசர்மா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரத்தில், விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனிடையே, கொரோனா பரவல் அதிகரித்ததால், நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது.

இதனால், விமான பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனையடுத்து, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமானச்சேவை, கடந்த 13-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. மீண்டும், மே 23-ஆம் தேதி விமான சேவை தொடங்கிய நிலையில், அது 25ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாளை முதல் சேலம்-சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும், வழக்கமான நேரப்படி விமானம் இயக்கப்படும் என்றும் சேலம் விமான நிலைய இயக்குனர் வி.கே.ரவீந்திர சர்மா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!