சேலம் மாவட்ட நரிக்குறவ மக்களுக்கு விசாரித்து உடனடி குடும்ப அட்டை

சேலம் மாவட்ட நரிக்குறவ மக்களுக்கு  விசாரித்து உடனடி குடும்ப அட்டை
X

சேலம் மாவட்டத்தில் நரிக்குறவ இன மக்களின் வீடுகளுக்குச் சென்று விபரங்களை பெற்று அவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

சேலம் மாவட்டத்தில் நரிக்குறவ மக்களின் வீடுகளுக்குச் சென்று குடும்ப அட்டைகளை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை விண்ணப்பித்தோருக்கு15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து, அடிப்படையில் தற்போது ஏராளமானோர் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நரிக்குறவ இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாரிகள் நேரடியாக சென்று அவர்களின் விபரங்களை பெற்று உடனடியாக குடும்ப அட்டை வழங்க உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் கசுவரெட்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவ இன பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுத்ததன் பேரில் அங்கு வசிக்கும் 11 பேருக்கு குடும்ப அட்டை வழங்க ஆட்சியர் கார்மேகம் உடனடியாக உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் அனைவருக்கும் குடும்ப அட்டைகள் தயார் செய்யப்பட்டு அவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்மேகம் 11 நரிக்குறவ இன பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

ஆண்டு கணக்கில் குடும்ப அட்டைக்காக அலைந்த நிலையில் தங்கள் குடும்பத்திற்கு நேரில் வந்து விபரங்களை பெற்று ஆட்சியர் குடும்ப அட்டை வழங்கியது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறி கண்ணீர் மல்க அவருக்கு நன்றி தெரிவித்தனர்.


Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!