குடும்பத்தகராறில் 2 ஆண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை

குடும்பத்தகராறில் 2 ஆண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை
X

கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் மற்றும் தாய்.

ஓமலூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கணவாய் புதூர் ஊராட்சி கே மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவருக்கு மரகதம் (30) என்ற மனைவியும் செல்வகணபதி (7) கோகுலக்கண்ணன் (5) என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருப்பதாக சந்தேகமடைந்து கணவனிடம் மரகதம் கேட்டுள்ளார். இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திர மடைந்த அவரது மனைவி மரகதம், தனது தோட்டத்தில் வீட்டிற்கு பின் இருந்த கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு தானும் கிணற்றில் விழுந்து உள்ளனர். அப்போது மரகதத்திற்கு ஏற்கனவே நீச்சல் தெரியும் என்பதால் குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டவுடன் தன் காலில் கயிறு மூலம் கல்லை கட்டி கிணற்றில் குதித்து உள்ளார்.

சிறிது நேரம் கழித்து கணவன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, யாரும் இல்லாததால் சந்தேகமடைந்து பல இடங்களில் தேடினர். தொடர்ந்து கிணற்றின் அருகே பார்த்தபோது மூன்று பேரும் கிணற்றில் விழுந்த அறிகுறி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள பொது மக்கள் அங்கு கூடினர். கிணற்றில் இறங்கி மீட்க முயன்றனர். மீட்க முடியாததால் காடையாம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பாதாள கம்பி கருவி கொண்டு முதலில் தாய் மரகதத்தை மீட்டனர். தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரம் கழித்து 3 சடலங்களையும் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் அனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காடையாம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்