சேலம்: கடத்தி வரப்பட்ட 6,722 கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை அமல் படுத்தும் வகையில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காவல் உதவி ஆணையாளர் நாகராஜ் தலைமையில் தனிப்படையினர் சேலம் கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கூரியர் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2,000 பாட்டில்களில் கர்நாடகா மதுபானங்கள் இருந்தன. அதில் இருந்தவர்கள் அளித்த தகவல்படி, தொடர்ந்து வந்த ஒரு கன்டெய்னர், மினி லாரிகளை மடக்கி சோதனை செய்ததில் 4,500 மது பாட்டில்கள் இருந்தன.
மூன்று மினி லாரிகளில் இருந்து 4.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6,722 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 3 வாகனங்கள் மற்றும் ரொக்கப்பணம் 3,02000 கைப்பற்றினர். விசாரணையில், தமிழகத்தில் இருந்து கூரியர் பார்சல்களை எடுத்துச் சென்று அங்கு இறக்கிவிட்டு, அங்கிருந்து வரும் பார்சல்களுடன் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
மது பாட்டில்களை கடத்திய, மன்னாா்குடியைச் சோ்ந்த ராஜேஷ்குமாா், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த சந்தோஷ், பெங்களூரைச் சோ்ந்த இளங்கோ, கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சசி ஸ்ரீதா், சேலம் அழகாபுரத்தைச் சோ்ந்த ராபா்ட், கோட்டகவுண்டம்பட்டியைச் சோ்ந்த கிருத்திக்ராஜன், சேலம் மாங்குப்பை பகுதியை சோ்ந்த உதயசூரியன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu