நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றி பெற தீவிரப்பணி: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றி பெற  தீவிரப்பணி: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்
X

ஓமலூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ ராஜேந்திரன் வேஷ்டி, சேலை வழங்கினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று நகர்புற தேர்தலிலும் 100% வெற்றி பெற தீவிரமாக பணியாற்ற வேண்டும் என திமுக எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் நடைபெற்றது.

கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு, திமுக கிளை செயலாளர்கள் மற்றும் பொது உறுப்பினர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி வேஷடி, சேலை மற்றும் இனிப்புகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசும் போது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் 100 சதவிகித வெற்றி பெற தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொண்டார்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai tools for education