தமிழகத்தில் ஏழை என்ற ஜாதி எதிர்காலத்தில் இல்லாத நிலையை உருவாக்குவோம் - முதல்வர்
சேலம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது,
திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அவர் போடாத வேடங்கள் இல்லை ஆனாலும் ஸ்டாலின் வெற்றி கனவு பலிக்காது. அதிமுகவிற்கு இயற்கையும், மக்களும் சாதகமாக இருக்கின்றனர்.
தமிழகத்தில் ஏழை என்ற ஜாதி எதிர்காலத்தில் இல்லாத நிலையை உருவாக்குவோம் என்றும் பேசினார். தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று என்னைப் பற்றி தெரியாது என்று பேசி அனைவருக்கும் தெரிய வைத்ததற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
திமுகவை அண்ணா இறப்பிற்குப் பிறகு சூழ்ச்சி செய்து முதல்வரான கருணாநிதி. பின்னர் உடல்நிலை குன்றிய போதிலும் ஸ்டாலினை நம்பி திமுக தலைவர் பதவியை கருணாநிதி கொடுக்கவில்லை. கலைஞரே ஸ்டாலினை நம்பவில்லை. அப்படி இருக்கும்போது நாட்டு மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக தான். எனவே காலத்தால் அழிக்க முடியாத கரும்புள்ளி திமுக பெற்றுள்ளது என்றும் கூறினார். இந்தியாவிலேயே ஜனநாயக கட்சி அதிமுக கட்சி தான், தற்போது மாறிப்போச்சு, விஞ்ஞான உலகம் என்பதால் ஸ்டாலின் பொய்களை இளைஞர்கள் நம்பமாட்டார்கள். எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்றும் பேசினார்.
தமிழக மக்களை இருட்டறையில் அடைத்தது போல் திமுக ஆட்சியில் வைத்திருந்தனர் ஆனால் மக்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான். மேலும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது அதிமுக ஆட்சியில் தான் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu