ஓமலூர் பகுதிகளில் வாழை இலை அறுவடை பாதிப்பு

ஓமலூர் பகுதிகளில் வாழை இலை அறுவடை பாதிப்பு
X

ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் விவசாயிகள் வாழை அதிகம் பயிரிட்டுள்ளனர். பழம் மற்றும் இழைக்கான வாழைகள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. பூவன், மொந்தன், செவ்வாழை, ரஸ்தாளி, தேன் என பல்வேறு வகையிலான வாழை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர்.

தோட்டங்களில் இருந்து வாழை இலை, வாழைத்தார்களை சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதில் பூவன், மொந்தன் உள்ளிட்ட ரகங்கள் சேலம் மார்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா 2 வது அலை அதிகரிக்க துவங்கியதாலும், நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு கட்டுபாடுகள், உணவகங்களில் கொரோனா காரணமாக பொதுமக்கள் வருகை குறைவாலும், வாழை இலை விற்பனை குறைந்தது. இதனால் வாழை இலை அறுவடை பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மரங்களிலேயே இலைகள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future