அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வராத நிதி: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வராத நிதி: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
X

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கட்டப்பட்ட வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வராததால்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கட்டப்பட்ட வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வராததால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் மூலம் கிராமப்புற பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் இரண்டு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் மானியமாக வழங்குகிறது. இந்த தொகை கட்டுமான பணியின் போது நான்கு பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 45 வீடுகள் கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியம் மூலம் ஆணை வழங்கப்பட்டு அந்த பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கான மானியத் தொகை இதுவரை முறையாக வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் எங்களுக்கு வீடு கட்ட அரசு ஒப்புதல் வழங்கி கட்டுமானப் பணியைத் துவங்கினோம். நான்கு பிரிவுகளாக மானிய தொகையை வழங்க வேண்டிய குடிசை மாற்று வாரியம் இதுவரை தொகையை தராமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக கூறினார்.

மேலும் இந்த தொகை முறையாக வழங்கப்படாததால் பலருடைய வீடுகளின் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். உடனடியாக அரசு எங்களுக்கு வழங்கவேண்டிய மானிய தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் .

Tags

Next Story
ai as the future