10 நாட்களுக்கு பிறகு சேலம் - சென்னை விமான சேவை துவங்கியது

10 நாட்களுக்கு பிறகு சேலம் - சென்னை    விமான சேவை துவங்கியது
X

சேலம் விமான நிலையத்தில் வந்திறங்கும் விமானம்.

10 நாட்களுக்கு பிறகு சேலம் - சென்னை இடையே பயணிகள் விமான சேவை துவங்கியது.

10 நாட்களுக்கு பிறகு சேலம் - சென்னை இடையே பயணிகள் விமான சேவை துவங்கியது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியது.

இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனையடுத்து சேலம் சென்னை பயணிகள் விமான சேவை கடந்த 13 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பத்து நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை துவங்கியது.

சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் விமானம் 8.15 மணிக்கு சேலம் வந்தடையும் பிறகு மறுமார்க்கத்தில் சேலத்தில் இருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு 9.35 மணிக்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!