சேலம் விமான நிலையத்திற்கு ரூ.10 கோடியில் 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள்!

சேலம் விமான நிலையத்திற்கு ரூ.10 கோடியில் 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள்!
X
சேலம் விமான நிலையத்திற்கு ரூ.10 கோடியில் 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் சேலம் விமான நிலையம் இயங்கி வருகிறது. சென்னையில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும், நாள்தோறும் தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலம் விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான அதிநவீன 2 தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அதிநவீன தீயணைப்பு வாகனத்தின் சிறப்புகள் பற்றி விமான நிலைய இயக்குனர் ரவீந்திரசர்மா கூறுகையில், சேலம் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் இயக்கப்படுகிறது. ஆனால் வரும் காலத்தில் பெரிய ரக விமானம் வந்தாலும் பாதிப்பு என்றால் பாதுகாக்கும் வகையில் அதிநவீன 2 தீயணைப்பு வாகனங்கள் சேலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த 2 தீயணைப்பு வாகனங்கள் ரூ.10 கோடி மதிப்பிலானது. தீயணைப்பு வாகனம் 40 நிமிடங்களில் 120 கிலோ மீட்டர் வேகம் வரை தண்ணீர் செல்லக்கூடிய வகையில் தீயை அணைக்க அக்குவா பிலிம் பார்மேஷன் போம் என்ற வேதிபொருள் கலந்து 360 டிகிரி கோணத்தில் நான்குபுறமும் தண்ணீரை சுழன்று அடிக்கும் வல்லமை உடையது.

இந்த வாகனம் அனைத்தும் எலக்ட்ரானிக் தானியங்கி சிஸ்டத்தில் இயங்க கூடியது. மேலும் இவற்றில் உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதாக, அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்