சேலம் மாவட்டத்தில் கொரோனா விதி முறைகளை மீறி திருவிழா: நிறுத்திய போலீசார்

சேலம் மாவட்டத்தில் கொரோனா விதி முறைகளை மீறி திருவிழா: நிறுத்திய போலீசார்
X

சேலம் அருகே கோயில் விழாவை கொரோனா விதி முறைகளை கூறி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் போலீசாரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி நடந்த திருவிழாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் போலீசாரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஊமை கவுண்டன்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லை பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தை மாதம் வெகு விமரிசையாக நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரொனா கட்டுப்பாடு காரணமாக திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு பூஜைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தனர்.

இந்த நிலையில் காலை முதலே பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு செய்து வந்தனர். மாலை வேளையில் கரகம் எடுக்க பக்தர்கள் சென்றபோது தீவட்டிப்பட்டி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தடையை மீறி கரகம் எடுத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்ததை அடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் கரகத்தை கோவிலை சுற்றி இறக்கி வைத்து சென்றனர். தொடர்ந்து கோயில் பூட்டப்பட்டதால் பக்தர்கள் கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபட்டு சென்றனர். இதனால் அந்த கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்