சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
X

சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன்  ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. சேலம் உட்பட பல மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக வேட்பாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்தும், மலர் கொத்து வழங்கியும் வாழ்த்து பெற்றனர். இதை தொடர்ந்து பிரச்சார வியூகம், வெற்றி பெறுவதற்கான வழிவகைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!