சேலம் தாரமங்கலம் நகராட்சியில் ஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி சகோதரர்கள்

சேலம் தாரமங்கலம் நகராட்சியில் ஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி சகோதரர்கள்
X

வாக்களிக்க வந்த மாற்று திறனாளி சகோதரர்கள்.

9 ஆவது வார்டில் சகோதரர்கள் இருவரும் பெற்றோருடன் சர்க்கர நாற்காலியுடன் வந்து தனது ஜனநாயக கடமையை பதிவு செய்தனர்.

சேலம் தாரமங்கலம் 9ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட பாட்டப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசு. நெசவுத் தொழிலாளியான இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் பாரதி நாகராசு, ஜெயக்குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். பிறவியிலேயே உடல் ஊனமுற்ற பாரதி, ஜெயக்குமார் இருவரும் எம்பிஏ பட்டதாரிகள் ஆவர்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 9 ஆவது வார்டில் சகோதரர்கள் இருவரும் பெற்றோருடன் சர்க்கர நாற்காலியுடன் வந்து தனது ஜனநாயக கடமையை பதிவு செய்தனர்.

தங்களைப் போன்றவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் அது மட்டுமில்லாமல் அனைவரும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியே தாங்கள் நேரில் சென்று வாக்களித்தோம் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!