பெரியார் பல்கலை.,யில் 1.53 லட்சம் பேருக்கு பட்டங்கள்: அமைச்சர் வழங்கல்

பெரியார் பல்கலை.,யில் 1.53 லட்சம் பேருக்கு பட்டங்கள்: அமைச்சர் வழங்கல்
X

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

பெரியார் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 20 ஆவது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு 1 லட்சத்து 53 ஆயிரத்து 992 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறாமல் இருந்த 20 ஆவது பட்டமளிப்பு விழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது.

இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு முனைவர் பட்டம் பெற்ற 6 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த 575 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை, இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 196 மாணவர்களுக்கு தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழை வழங்கினார்.

மேலும் இந்த விழாவில் 2019 - 2020 மற்றும் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 1,53,215 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் ரங்கராஜன், பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதன் மற்றும் பல்கலை கழக பேராசிரியர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!