சேலம் மாவட்டத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார்

சேலம் மாவட்டத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார்
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடுங்களில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 700ஐ கடந்து விட்டது. அதனால் கொரோனோ இரண்டாவது அலையில் அமைக்கப்பட்டது போன்று, ஓமலூர், காடையம்பட்டி, தாரமங்கலம், உள்ளிட்ட பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்க கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் 300 படுக்கைகள் மற்றும் பெரியார் பல்கலை கழகத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் ஓமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்து வருகிறது. ஓரிரு நாளில் பணி முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பார்வையிட்ட பின் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்க உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!