எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.

ஓமலூர் கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநகர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையேற்ற இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நவம்பர் 1ம் தேதி திருத்திய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. ஆதலால் நாம் தேர்தலுக்கு தயாராக வேண்டும், வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்து விடுபட்டவர்களை சேர்க்கவும், இறந்தவர்களை நீக்க பகுதி கழக நிர்வாகிகள் முணைப்புடன் செயல்படவேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், கழக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், பகுதி கழக நிர்வாகிகள், டிவிசன் செயலாளர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!