திமுகவை ஓட, ஓட விரட்ட வேண்டும் சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

திமுகவை ஓட, ஓட விரட்ட வேண்டும் சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு
X
மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து திமுக வை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். ஓமலூர் அதிமுக வேட்பாளர் ஆர்.மணி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஓமலூர் தொகுதி அதிமுகவின் கோட்டை. சேலம் மாவட்டத்தில் எந்த பணியும் நடக்கவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். இந்த தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தரமான சாலை, குடிமராமத்து திட்டத்தால் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன.

2006 திமுக தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் தருவதாக கூறினார். இங்கு எத்தனை பேருக்கு தந்துள்ளார்கள். அடக்கம் செய்யக்கூட நிலம் தரவில்லை. நில அபகரிப்புதான் நடந்தது.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதற்காக விருது பெற்றுள்ளோம். நீர்மேலாண்மை, சுகாதாரத்துறை, மின்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் விருது பெற்றுள்ளோம்.

மின்மிகை மாநிலமாக உள்ளதால் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. 2019ல் முதலீட்டாளர மாநாடு மூலம் 3 லட்சத்து 500 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 320 தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 27 சத பணிகள் முடிந்துள்ளது. இதன்மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசால் வழங்கப்பட்டு பழுதடைந்த வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. கோர பசியில் உள்ளனர். இந்த தேர்தலில் திமுக தில்லுமுல்லு செய்து வெற்றிபெற பார்க்கின்றனர். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்




Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!