/* */

சேலத்தில் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு பெட்ரோல் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி

HIGHLIGHTS

சேலத்தில் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாற்றுத்திறனாளி  தீக்குளிக்க முயற்சி
X

மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த மாற்றுத்திறனாளியை மீட்கும் போலீசார்.

சேலம் ஓமலூர் அருகே உள்ள ஊ.மாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு(30), காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவர் இவரைப் போன்ற மாற்றுத்திறனாளி பெண்ணான வசந்தா(28) என்பவரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் ஏழு வயதில் மகன் உள்ளார்.

இதனிடையே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து வசந்தா அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய தங்கராசு, குடும்பம் நடத்த வருமாறு நேரில் சென்று அழைப்பு விடுத்த நிலையிலும் வராததால் விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவி சேர்த்து வைக்க கோரி, தங்கராசு பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். பின்னர் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’