சேலத்தில் நாளை அதிமுக உட்கட்சி தேர்தல்: எடப்பாடி பழனிசாமி ஆய்வு
அதிமுகவின் மாவட்ட ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. நாளைய தினம் சேலம், கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் உள்பட 15 மாவட்டங்களுக்கு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு என தேர்தல் நடத்தும் அலுவலர்களாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஓமலூரில் உள்ள அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வாக்கெடுப்பு முறையில் நடத்துவதற்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகள் நகராட்சிக்கு வார்டு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu