மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பர் கைது

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பர் கைது
X

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமார்.

பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவரின் தனிப்பிரிவு உதவியாளர் மணி, அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் வந்தது.

நெய்வேலி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி மற்றும் மணியின் நண்பர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தலைமறைவான இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி அவரது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமாரை கொண்டலாம்பட்டியில் வைத்து தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!