முழு ஊரடங்கால் விமான சேவை 10 நாட்களுக்கு நிறுத்தம்: ட்ரூஜெட் அறிவிப்பு

முழு ஊரடங்கால் விமான சேவை 10 நாட்களுக்கு நிறுத்தம்:  ட்ரூஜெட் அறிவிப்பு
X
சேலத்திலிருந்து சென்னைக்கு தினசரி விமான சேவை

முழு ஊரடங்கு காரணமாக சேலத்திலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த விமான சேவை 10 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக ட்ரூஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனவே சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை 22ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் அலுவலக பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், அவசர தேவைக்காகவும் மருத்துவத் தேவைக்காகவும் மட்டும் விமான சேவை இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!