முன்னாள் எம்எல்ஏ.,கள் அதிமுகவில் ஐக்கியம்

முன்னாள் எம்எல்ஏ.,கள் அதிமுகவில் ஐக்கியம்
X

நிலக்கோட்டை மற்றும் பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ.,கள் இரண்டு பேர் அமமுகவில் இருந்து விலகி முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனிடையே பரக்குடி முன்னாள் எம்எல்ஏ., முத்தையா, முன்னாள் நிலக்கோட்டை எம்எல்ஏ., தங்கதுரை ஆகியோர் அமமுக கட்சியிலிருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், அதிமுகவை மீட்டெடுப்போம் என்று கூறியதன் அடிப்படையில் தினகரனை நம்பி சென்றோம். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் அமமுக டெபாசிட் கூட வாங்கவில்லை. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் தினகரன் வெற்றி பெற மாட்டார். மக்கள் தினகரனை ஏற்கவில்லை. எனவே தாய் கழகமான அதிமுகவில் இணைந்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை தக்க வைக்க பாடுபடுவோம் என்றும் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!