டீ கடையை அடித்து நொறுக்கிய சம்பவம்- கமல் கண்டனம்

டீ கடையை அடித்து நொறுக்கிய சம்பவம்- கமல் கண்டனம்
X

சேலத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஒருவர் டீ கடையை அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மேச்சேரி பிரிவு சாலையில் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட்டதாக கூறி ராமச்சந்திரன் என்பவரின் டீ கடை ஒன்றை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவல்துறை அதிகாரியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருந்த டீ கடையை அடித்து நொறுக்குகிறார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர். இதே காரணம் சொல்லிதான் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்தே கொன்றார்கள். அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.




Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்